அன்பிற்குரிய கன்னி ராசி அன்பர்களே தற்போது வரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தோஷத்தை கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான்,
சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது, 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான், அதாவது உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
தங்களுக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனியாக இருந்து, உங்களுக்கு நிறைய துன்பங்களையும் மன நிம்மதி இன்மையும் வீடுகட்ட தடைகளையும் தாய்க்கு உடல் உபாதைகளையும் கொடுத்துக்கொண்டிருந்த அர்த்தாஷ்டமச் சனி பகவான், தற்போது பஞ்ச மைதானத்திற்கு பெயர்ச்சியாகி, தங்களுக்கு பலன்களை வழங்க இருக்கிறார் வாருங்கள் பார்ப்போம்.
கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- பொருளாதார நிலை உயரும்
- திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் கிட்டும்
- உத்தியோக உயர்வு கிட்டும்
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை
- ஊக வணிகம் கை கொடுக்கும்
- மாணவர்களின் கல்வி சிறக்கும்
விரிவான பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஸ்தானத்தில் சனி பகவான் மிக்க நன்மைகளையே அளிப்பார். சனி பகவான் அருளால். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் தங்களுக்கு சிந்தனை தடுமாற்றம் உருவாகும் நிறைய குழப்பமான சூழலில் சந்திக்க வேண்டியது வரும் இருப்பினும் குழப்பத்தில் ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்கும் சனி பகவான் கன்னி ராசி காரர்களுக்கு பொருளாதார நிலையில் முன்னேற்றமான நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பார். திருமணம் மற்றும் புத்திரபாக்கியத்தை அமைத்து தருவார். தனது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் நிலையையும் சனியின் சஞ்சாரமானது கன்னி ராசி அன்பர்களை அனுபவிக்க வைக்கப்போகிறது.
வருமானம்
கன்னி ராசி அன்பர்களுக்கு உத்தியோகத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப தனநிலையை உயர்த்திக்கொள்ள சனி பகவான் சாதகமான சூழ்நிலையில் உள்ளார். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளரின் வரவு கூடுவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தரகுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிக முதலீடு இல்லாமலும் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலும் இருந்தால் அதிக பொருளாதார இழப்பை சந்திக்காமல் தப்பிக்கலாம். அதிக ஆசைகளற்ற நிதான போக்கை கடைபிடித்தால் யூக வணிகத்தில் பொருளாதார நிலையில் லாபத்தை அடையலாம்.
தொழில்
உத்தியோகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தான பொறுப்புகள் கிடைப்பதற்கு சனியின் சஞ்சாரம் சாதகமானதாக உள்ளது. வண்டி, வாகனத்தை வைத்து தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்ற சூழல் ஏற்படும். சுற்றுலா சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டோர் மிகச்சிறந்த லாபத்தை அடையலாம். ஆன்மீகம் சம்மந்தப்பட்ட தொழில் புரிவோரும் நல்ல லாபத்தை அடைந்து தொழில் முன்னேற்றம் அடைய முடியும்.
ஆரோக்கியம்
பொதுவாக கன்னி ராசி அன்பர்களுக்கு தற்பொழுது நுரையீரல் மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கிய உணவு பழக்கம் மற்றும் உடல் எடை கட்டுப்பாடு மூலம் ஆரோக்கிய வாழ்வை ஏற்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு வயிறு சம்மந்தபட்ட ஒவ்வாமை தோன்றி மறையும். எளிதில் ஜீரணமாகும் உணவுகள் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக்கொடுக்கலாம். பெரியவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். அதிக தண்ணீர் உட்கொள்வதன்மூலம் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
திருமண வாழ்க்கை குடும்பம், குழந்தைகள்
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இனக்கமான சூழ்நிலை ஏற்படும். ராசி அன்பர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களின் காதல் கைகூடும். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும் திருமணம் ஆனவுடனேயே புத்திரபாக்கியத்தை அருளக்கூடிய நிலையில் சனிஸ்வர பகவான் சஞ்சாரம் நிகழ்த்தப்போகிறது. குழந்தைகளின் கல்வியில் மேம்பாடு இருக்கும் குழந்தைகளுக்கு தொழில் வளம் பெருகும் குழந்தைகள் வேலைகள் எதிர்பார்த்திருந்தால் வேலைகள் கிடைக்கும் பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்றமான வாழ்க்கை இந்த சனிப் பெயர்ச்சி கொடுக்கும் என கூற வேண்டும்.
கல்வி
குழந்தைகளுக்கு கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் அதிகரித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவார்கள். கல்லூரி செல்லும் பிள்ளைகளிடம் சற்று விளையாட்டுப் போக்கு அதிகரிக்கும். பொறியியல் படிப்பில் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைவார்கள். ஆராய்ச்சி படிப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து விஞ்ஞானி பதவிக்கு அழைப்புகள் தேடிவரும். கணிதம் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம்
உங்கள் குல தெய்வ கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதால் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக கன்னி ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் சுப, அசுப பலன்களை கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி உங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.