திருக்கோடிக்காவல் இது ஒரு சிவஸ்தலம் மயிலாடுதுறை பூம்புகாரில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் கோயில் அமைந்துள்ளது.

இந்த சாலையில்தான் அதிகமான கோயில்கள் அமைந்துள்ளன. இக் கோயில் சூரியனார் கோயிலுக்கு முன்பே அமைந்துள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இங்கே சிவனுக்கு பூஜை செய்து தங்களுடைய சக்தியை அதிகப்படுத்திக்கொண்டதாக வரலாறு உள்ளது. லலிதா சகஸ்ரநாமம் இங்குதான் உருவானதாக வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் சனீஸ்வர பகவான் பாலசனீஸ்வரன் பட்டம் பெறுகிறார்.

இக்கோவிலில் சனீஸ்வரனை எமன் தர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைப்பில் உள்ளது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான் எமதர்மராஜன் சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும். நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி கண்டச்சனி அர்த்தாஷ்டம சனி மரணச் சனிஎன்ற பால்ய வயது சனி திசைகளுக்கும் இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் சனி திசையானது நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணியங்களுக்கு வரவு-செலவு கணக்குகளை சரிபார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல்உலகத்தின் நீதி பதியாகிய பால சனீஸ்வரர் நமது வரவு செலவு கணக்கு களையும் பாவ புண்ணிய கணக்குகளை சரிபார்க்க சித்திரகுப்தன் அதை சரிபார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்பட்டு பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு அந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். லலிதா சஹஸ்ரநாமம் இயற்றிய வரலாற்று சிறப்புமிக்க இத்தலத்தில் சுயம்புவாக சிவனும், பால சனீஸ்வரராக சனி பகவான், எமதர்மராஜாவும், சித்திரகுப்தன் ஈசானிய மூலை பகுதியில் சனீஸ்வரருடைய புதல்வன் மாந்தி இவர்கள் அனைவரும் ஒரே தலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய தலமாக இது விளங்குகிறது. சனி பகவானுடைய நீதிமன்றமாகவே திருக்கோடிக்காவல் அமையப்பெற்றுள்ளது.