திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், உற்சவ விநாயகர், இடது புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சம்பந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், அடுத்து நடராஜர் சன்னதியும், வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வெளிச்சுற்றில் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் துர்த்த விநாயகர், சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். மருதவுடையார்-சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. அதற்கு முன் நந்தி பலிபீடத்துடன், யாகசாலை, பராசரர் பூசித்த லிங்கம், காசி விசுவநாதர் உள்ளிட்டோர் உள்ளனர்.

இறைவர் திருப்பெயர்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி.
தல மரம்: மருகல் (ஒரு வகை வாழை).
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், இலட்சுமி.
கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் “திருமருகல்” என்று பெயர் பெற்றது. கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாகும். கோவிலுக்கு வெளியே எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்க தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. தீர்த்தக் கரையில் முத்து விநாயகர் சந்நிதியைக் காணலாம். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. 4 புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மூலவர் இரத்தினகிரீஸ்வரர் (மாணிக்கவண்ணர்) சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சனீசுவர பகவானுக்கு சுவாமி சந்நிதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சந்நிதி உள்ளது. இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. சம்பந்தப் பெருமான் திருமருகலில் வணிகன் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்த போது, சிறுத்தொண்டர் வந்து திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி சிறுத்தொண்டருடன் திருசெங்காட்டங்குடி செல்ல ஆயத்தமானார். திருமருகல் இறைவன் ஆளுடைய பிள்ளையாருக்கு திருமருகல் கோவிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவனைக் காட்டி அருள் புரிந்தார். சம்பந்தரும் அங்கமும் வேதமும் ஓதும் நாவர் என்று தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான) பதிகம் பாடினார். முன்னொரு காலத்தில் குசகேது என்ற மன்னன் இந்தப் பகுதியை ஆண்டுவந்தான். அப்போது, மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. குடிமக்கள் செய்தொழில் இல்லாமல் பசி, பட்டினியால் வாடினர். அரசனோ மழை வேண்டி அன்னதானம், சொர்ண தானம் யாவும் செய்தான். பூஜைகள் செய்து வேத பாராயணம் செய்தான். அடியாரை வழிபட்டான். சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி முதலிய விரதங்கள் மேற்கொண்டான் எனினும் மழை பொழியவில்லை.

மனம் ஒடிந்த மன்னன் தற்கொலை செய்துகொள்ள முயன்றான். மக்களுக்காக மன்னன் தன் உயிர்துறக்க துணிந்ததை கண்டு இறைவன் திருமருகலைச் சுற்றி ரத்தினம், மாணிக்கம், முத்து, நெல் என மழையாய் பொழிவித்தார். ரத்தின மழை பொழிந்ததால் இங்குள்ள சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்துக்கு வந்து ஸ்வாமி-அம்பாளைத் தரிசித்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும். மேலும் நோய்கள் நீங்க சுரம் தீர்த்த விநாயகரையும், கடன் தொல்லைகள் நீங்க மணிவண்ணரையும் வழிபட்டுச் செல்கிறார்கள். மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையி8ல் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கங்களாஞ்சேரி எனும் ஊர் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து இடப் புறமாக கிளைபிரிந்து செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வைப்பூரை அடையலாம். இங்கே தரிசனத்தை முடித்துவிட்டு திருமருகலுக்குச் செல்லலாம். இரண்டு கோயில்களும் சுமார் 4 கி.மீ. தூர இடைவெளியில் அமைந்துள்ளன.

திருமுருகல் என்பது தமிழக மாநிலத்தின் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இங்கே, அருள்மிகு ஆமோதாளக நாயகி, அருள்மிகு ரத்தினக்ரிஸ்வரர், வண்டுவார் குழலி அம்மான் ஆகியோருடன் இக்கோயில் உள்ளது. இந்த இடத்தின் சிறப்பம்சம் வாழைப்பழம். இந்த மரத்தின் மரக்கன்றுகள் கோயிலைத் தவிர வேறு எங்கும் பயிரிட்டாலும் வளராது,! கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் சுரம்திர்த விநாயகர். நீங்கள் அவரிடம் பிரார்த்தனை செய்து அபராதம் செலுத்தினால், சனி திசை விலகும்என்பது ஐதிகம், சனிஸ்வர பகவன் நளமஹராஜனை சனி தோஷத்தில் விடுவித்த இடம், ஆனாலும் நளமஹராஜன் குழப்பமான மனதில்இருந்தார். இங்குள்ள தீர்த்தங்களும் அற்புதமானவை, வரலட்சுமி நோன்பு நோக்கிய நாளில் நீங்கள் லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி மணிக்கவண்ணாராவைப் பார்வையிட்டால், கடன் பிரச்சினை தீர்க்கப்படும். பொம்மை சீரான தீர்த்தத்தில் ஜெபிப்பதன் மூலம் ஒரு மகனைப் பெற்றெடுக்கும். சந்திரபுஷ்கரணியில் குளிப்பதன் மூலம் அனைத்து நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.
