அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில் (பொங்கு சனீஸ்வரர் திருக்கோயில்) திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம்,
பஞ்சு தோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே
சுவாமி பெயர்: கொள்ளிக்காடர் (அக்னீஸ்வரர்)
அம்மன் பெயர்: பஞ்சினும் மெல்லடியாள்
ஸ்தல விருட்சம்: வன்னி மரம் (அக்னி மரம்)
தீர்த்தம்: அக்னி தீர்த்தம் (கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது)

தஞ்சை தரணியில் காவிரியின் தொன்திருக்கோயில்களில் 115வது திருக்கோயில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம். கீராளத்தூர் ஊராட்சியில், அரிச்சந்திர நதிக்கும், கடு ருட்டி நதிக்கும் இடையில் நடுநாயகமாக சிவத்தலங்களில் சிறப்பு மிக்கதோர் ஸ்தலமாக “திருக்கொள்ளிக்காடு” எனும் இயற்கை எழில்மிக்க நஞ்சை சூழ்ந்த சிற்றூரில் அக்னீஸ்வரர் குடிகொண்டு விளங்குகிறார். “அக்னி” என்ற வடமொழிச்சொல் “தீ” “நெருப்பு எரி” . “கொள்ளி” என்ற சொற்களால் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ அக்னீஸ்வரர் என்பது ராமேஸ்வரம், சோமேஸ்வரம், நாகேஸ்வரம் என்பது போல் அக்னீஸ்வரம் என்று வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடும் திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமறையில் கூடினார்க்கு அருள் செய்வார் கொள்ளிக் காடரே என்று திருவாய் மொழியை பெற்று. இன்றளவும் திருக்கொள்ளிக்காடு என்று தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளி” என்றச் சொல் அக்னியின் மொழி பெயர்ப்பாக கண்டு கொள்ளப்படுகிறது. அவ்வளவே. மற்றபடி “கொள்ளி” என்ற சொல்லை எவ்விதத்திலும் அமங்கலச் சொல்லாக கருதுதல் கூடாது கொள்ளிக்கடன் என்பது போன்ற பொருளில் இச்சொல் வழங்கப்படவில்லை பஞ்ச பூதங்களில் ஒன்றான “தீ” என்ற சொல்”கொள்ளி என்று தமிழில் அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் உள்ள சனி பகவான் பொன் தருவான், பொருள் தருவான், கல்வி தருவான் போகமும் தருவானை. எல்லாவற்றிற்கும் மேலாக சனிக்கே உரிய சிறப்புடன் நீண்ட ஆயுளையும் தரும் சிறப்புடைய ஸ்தலமாகும். சிறப்பம்சமாகும். சனீஸ்வர பகவான் பொங்கு சனி. இவர் அருள் பாலிப்பவராக இத்திருத்தலத்தில் உள்ளதால் பிற கிரஹங்களுக்கு இங்கு சக்தி இல்லை என்றபடியால், ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. வடக்குப் புறத்தில் துர்க்கை அம்மன் அருள் பாலித்து வருகிறார். தென்திசையில் தட்சிணாமூர்த்தி தியான நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விநாயகர், காசி விஸ்வநாதரை வணங்கி வலம் முடிந்து உள்ளே சென்றால் நேரே அக்னீஸ்வரர் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சன்னதியாகும். சன்னதிக்கு முன்னால் இடப்புறம் பஞ்சினும் மெல்லடியாள் எனும் மிருதுபாத நாயகி சன்னதி தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.
தெய்வப் பிறவிகளான நாயன்மார்கள் கூட கோள்களின் (நவக்கிரஹங்களின்) ஆட்சிக்கு உட்பட்டு அல்லல் உற்றது. இறைவனின் அருளால் துயர் போக்கிக் கொண்டதையும் அறிகிறோம். சாதாரண மக்களாகிய நாம் திருக்கொள்ளிக்காடு வந்து சனி பகவானை தரிசித்து “திருக்கொள்ளிக்காடு உடைய மகாதேவன் பாதம் பணிந்தால் சூரியனைக் கண்ட பனி போல் நம் துன்பங்கள் அகலும். சனி பகவான் அனைத்து தோஷங்களும் நீங்கும்

இத்திருத்தலம் சனி பகவான் சிவபூஜை செய்து ஈஸ்வர பட்டம்” பெற்ற ஸ்தலமாகும். திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வர பகவான் தனி விமானம், தனி முகூர்த்தம். தனி சன்னதி. தனிமண்டபம் கொண்டு பக்தர்களின் அல்லல் நீங்கி அருள் பாலிக்கிறார்
ஆதித்யாதி நவநாயகர்களுள் ஈஸ்வர பட்டம் பெற்றவர் மிக மெல்ல நகரும் சுபாவம் உடையவர் ஆதலால் “மந்தன்” என சொல்லப்படுபவரும், அவரவர் வினைவழி அவரவர் விதியை நிர்ணயிப்பதால் “கர்மகாரகன்” என்ற பெயர் உடையவரும் ஆகிய ஸ்ரீ பொங்கு சனி பகவான் போற்றி வணங்குவதற்குரிய தெய்வமாகும். இத்திருத்தலத்தில் மகாலெட்சுமி ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு. லெட்சுமி அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி, அத்தனைச் செல்வங்களுக்கும் அடிப்படை உழவுத்தொழில் “மேழிச் செல்வம் கோழை படாது என்றும் “சுழன்றும் ஏர்பின்னது உலகம் வாசகங்களால் அக்கருத்து நன்கு உணர்த்தப்படுகிறது. இத்தலத்திலுள்ள ஸ்ரீ பொங்கு சனி பகவான் கையில் “கலப்பை” ஏந்தியவராக காட்சியளிப்பது இத்தலத்தின் இன்னுமோர் சிறப்பு, சோதிட சாஸ்திரங்களில், வேத ஆகமங்களின் மனிதர்கள் நமக்கு வரும் சிரமத்தை குறைக்கவும், நீக்கவும் வேண்டி திருக்கோயிலில் வழிபடுவது வழக்கமான தாகும். அதில் ஏழு லோகங்களிலும் உள்ள சகலமானவர்களுக்கும் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப-துன்பங்களை அனுபவிக்க செய்கிறது சனி பகவான். நளமகராசனின் சனி விட்டது திருநள்ளாறு சகல செல்வங்களையும் கொடுத்தது திருக்கொள்ளிக்காட்டில் தான் சுப-சுக பலன்களை இறைவன் தானே நேரே அளிக்காமல், அ சக்திகள் மூலம் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள கிரகங்களின் மனிதர்களாகிய நமக்கு அளிக்கிறார் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் அறிகிறோம்
திருக்கோயில் (ஸ்தலம்) அமைப்பும் சிறப்பும் இத் திருத் த லத் தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கொள்ளிக்காடரை திருஞான சம்பந்தர் தேவாரத்தில் “ஓங்கு புகழ் கொள்ளிக் காடரே” என்றும், இத்தலத்தை தரிசித்தால் எல்லா புகழும் ஒருவர்க்கு ஓங்கும் என்றும் கூறியுள்ளார். சோழ மன்னன் ஒருவருக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவருக்கு அமைதி கிட்டாமையால், கடைசியாக திருக்கொள்ளிக்காட்டின் பெருமை அறிந்து, இங்கு வந்து சனி பகவானை பூசித்து அக்னீஸ்வரர். மிருதுபாத நாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கிய போது சனி தோஷம் முழுவதும் நீங்கி மனமகிழ்வு பெற்றார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் “வன்னி மரம்” ஆகும் தீர்த்த குளம் திருக்கோயிலுக்கு வடக்கு புறம் உள்ளது. அகன் தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருக்கோயில் முகப்பு வழியாக உள்ளே சென்றால் பலிபீடமும் நந்தியும் காட்சி தருகிறது. பிரகாரம் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார் பொதுவாக முருகக் கடவுள் வேல் மயிலுடன் எல்லா ஸ்தலங்களில் காட்சியளிப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் முருகக் கடவுள் கையில் வில்லேந்திய வராக காட்சி அளிப்பது வித்தியாசமாக இருப்பது எங்குமில்லா சிறப்பு அம்சமாகும்
மகாலெட்சுமி சன்னதியும் சனிபகவ தனித் தனி சன்னதியாக அருகருகே உள்ளது. பொங்கு சனிபகவானுக்கு நேரெதிரே பைரவர் சந்நிதியும், நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது. நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்காமல் அமைந்திருப்பது பொதுவான அம்சமாகும் இத்திருத்தலத்தில் நவக்கிரகங்கள் “ப” வடிவில் அமைந்துள்ளது. சனீஸ்வரர் மந்தமானவர். வேகமாக செயல்பட முடியாதவர் எனவே அவரது 19 ஆண்டு கால மகாதிசையின் போதும் சரி ஏழரைச்சனியாக உருமாறும் போதும் சரி, அஷ்டம சனியாக ஆட்டி வைக்கும் போதும் சரி, அர்தாஷ்டம சனியாக அலையும் பொழுதும் சரி மந்தமாகவே செயல்படுவதால் இது நமக்கு அனுகூலம். எனவே இந்த சமயத்தில்தான் அவருக்கு பிடித்தமான பிரார்த்தனைகள் செய்து கெடுதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு பொங்கு சனீஸ்வரர் நமக்கு அனுகூலமாக உதவுகிறார்
ஸ்ரீ பொங்கு சனி பகவானை வழிபடும் முறை கிரகங்களுக்கு சக்தி மிகவும் வலிமையுடையது என்ற வாக்கியபடி
“துஷ்டோ ஹிப்பர தாதா
திருஷ்டோ ஹத்திச தையம்” என்ற படி கிரஹங்கள் சந்தோஷித்தால் எதையும் அளித்து விடும் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே ஜபம், தானம், ஸ்தோத்ரம், அர்ச்சனை. அபிஷேகம் செய்வது சகல நன்மைகளையும் உண்டாகும். சனிக்கிரக பிரீதியாக இவைகளை செய்வதால் துன்பம் நீங்குவது மட்டும் இன்றி சகல சுகங்களும் பெறுவது உண்மை . பிறந்த ஜாதகத்தில் உள்ள
கிரகங்களுக்கு எந்த நிலையில் சனி பகவான் வருகிறார் என்பதைப் பொறுத்தம் பலன் தருவார் எள் சாதம், உளுந்து வடை, நாவல் பழம், திராட்சை தேங்காய், எள் தீபம், கருப்பு பட்டு, கல நீலப்பட்டு, கரு நீல புஷ்பங்கள் நீல கற்கள், இரும்பு சம்பந்தபட்ட பொருட்கள் சனிபகவானுக்கு பிரியமானவை ஆகும். மேற்கண்டவைகளைக் கொண்டு சனி பகவானை வழிபட்டால் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க புத்திர தனம், தான்யம், ராஜ்யம், வெற்றி. ஆயுள் சம்பத்துக்களையும் அருள்வார். கொன்றை பூ கொத்து கொத்தாக மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக அழகு பொழியும். இம்மலரினைக் கொண்டு இத்திருத்தலத்தில் அக்னீஸ்வரனையும், பஞ்சினும் மெல்லடியாளையும், பொங்கு சனி பகவானையும் அர்ச்சித்து 7 வாரம் வழிபட்டு வர பிரிந்த குடும்பங்கள் ஒன்று பட்டு ஒற்றுமையுடன் வாழ வழி வகுப்பார். மேலும் அவ்வாறு ஒற்றுமையுடன் செயல்படும் குடும்பங்களுக்கு, வழி படுவோருக்கு செல்வம், பதவி, கௌரவம். அந்தஸ்து, மன அமைதி, நீண்ட ஆயுள், பல விதமான சுகங்களும் குபேர சம்பத்து. உத்யோகம், பதவி உயர்வு மற்றும் சுபகாரியங்கள் அனைத்தும் இத்தலத்தில் உள்ள பொங்கு சனீஸ்வர பகவான் அருள்கின்றார்.
சனி பகவான் சிவ பூஜை செய்து ஈஸ்வரப் பட்டம் வாங்கிய ஊர். சாதாரணமாக எல்லா ஊரிலும் உள்ள சனி பகவானுக்கு கையில் சலம், வில், அம்பு (ஆயுதங்களாக) இருக்கும்; அவர் தண்டனை கொடுக்கும் மூர்த்தி அவர். மனிதன் தான் செய்த பாவம் சனி தோஷம் வரும்பொழுது அவனை தண்டனை அனுபவிக்கச் செய்து புண்ணியவனாக் ஸ்ரீ பொங்குசனிபகவானின் வேலை. இவ்வூரில் ஸ்ரீ பொங்குசனி பகவான் சிவபூஜை செய்து, ஈஸ்வரப் பட்டம் பெற்று அனுகிரனை மூர்த்தியாக (வாழ்த்தும் கடவுள், அருள்பாலிக்கும் கடவுள்) வாம் பெற்றார். அதாவது மகாலெட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து வல மேல் கரத்தில் ஏர் கலப்பையும், வல கீழ்கரம் அபய ஹஸ்தம் ஆகவும்உள்ளது. இடப்புற மேல்கரத்தில் காக்கையும். கீழ்க்கரம் ஊர் ஹஸ்தமாகவும் காக்கையை வாகனமாகவும், கிழக்கு நோக்கியும் நின்ற திருமேனியாகவும் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பொங்கு சனீஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரில் பைரவர் அனுக்கிரக மூர்த்தியாக அனுக்ரஹம் செய்கிறார் பொங்கு சனி பகவான் நமக்கு தன லாபத்தை அள்ளித் தருபவர். நமது வசதிக்கு தேவையான தனபாக்கியத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு சனி பகவான் 10ம் வீட்டிலிருந்து அவரை சுப கிரகங்கள் பார்த்தால் கோடீஸ்வரராக ஆக்கிவிடுவார் ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதாண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வரனின் பார்வையைப் பெறுகின்ற வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் எவ்வித கெடுதல்களும் வராமலிருக்கவும், வந்தால்
ஸ்ரீ பொங்கு சனி பகவானை தரிசித்தால் தாங்கும் சக்தியைஅருள்வார் ஒருவருடைய வாழ்க்கையில் எல்லோரும் சுகமே தொடர்ந்து அனுபவிக்கக் கூடாது: இன்பமும் துன்பமும் இயற்கை என்பதை உணர வைப்பவரே சனீஸ்வரர் நான். சனீஸ்வரர் எதைச் செய்தி அதற்கொரு காரணமும் உண்டு. அட்டமத்தில் வந்தபோதும் சரி, 12ஆம் வீட்டில் இடது
இருக்கும் பொழுதும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுதும் கூடும்
ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, லக்னத்துக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ஆண்டு காலமும் இடைஞ்சல் உண்டு ஞானத்தையும், வைராக்கியத்தையும் வாரி வாரி கொடுத்தது க து வு ந் த ன் கொண்டிருக்கிறீர்களல்லவா இந்த இரண்டு கிரகத்திற்கும் உயிரணுக்கள், ஆன்மபலம் சனி பகவான்.
ஸ்தலம் தீர்த்தம்
இத்திருத்தல தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என் அழைக்கப்படுகிறது. திருத்தலத்திற்கு வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையில் கஷ்டப்படுவோர். மனநிலை சரியில்லாதோர், அணைக்க நலங்களும் பெற்று சுக வாழ்வு வாழ விரும்புவோர் இத்திருத்தலம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் பிணி நீங்கி, எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். சனி தோசம் நீங்கிய நளன். ஸ்ரீ பொங்குசனியாக விளங்கும் திருக்கொள்ளிக்காடு வந்து பொங்கு சனீஸ்வரரை பூஜித்து இழந்த நாடு, நகரம், புகழ் மனைவி, மக்கள். கீர்த்தி, செல்வம். மனைகள் அனைத்தும் பெற்று தன் நாடு சென்று சிறப்பாக ஆட்சி புரிந்தார் கல்வெட்டு செய்திகள்:
ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற் கோயில் இருந்த இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் புதுப்பித்தான். கோயிலில் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் மூன்றும், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் எடுப்பித்த முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் ஐந்தும் பிற சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் ஐந்தும் உள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கியிருக்கிறது
முதலாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டில் அருள்மிகு சுந்தரப் பெருமாள், நம்பிராட்டியார், கணபதிப்பிள்ளையார் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் திருக்கொள்ளிக்காடு ஊரார் கோயிலுக்கு நிலம் அளித்தது அதன் வருவாயிலிருந்து தினமும் 6 நாழி அரிசி அமுதுக்காக அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதற்கு தடையாக யார் இருந்தாலும் அவர்களிடமிருந்து 25 கழஞ்சு பொன்னை ஊர் மன்றம் அபராதமாக வசூலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் பாதசிவன் ஆச்சன் என்பவனும், அவன் தம்பி ஆச்சன் அடிகள் என்பவனும் கோயிலில் சங்க, காலம், சேகண்டிகை ஆகியவை ஒலிப்பதற்கு நிலம் அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.
