அற்பதனமும், அநேக மனைவிகளும், தாழ்ந்த குல ஸ்த்ரீகளின் மேல் ஆசையுள்ளவன் (பிருஹத் ஜாதகம்) நிற்குமோ சிடபந்தன்னில் நிற்கில் பெண்கட்கு லோலன் நற்குணன் மறதி இல்லான் நாரியர் பலரைச் சேர்வான். (சாதக அலங்காரம் )
தீயகுணமும், தீய செயலும் கொண்டவர் – பிடிவாதக்காரர் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். இவர்களின் களத்திர வகைக்கு கேடு உண்டாகும். இவர்கள் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருப்பார். (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்) கொஞ்சம் பொருளுடையவனும், அதிக வியாபாரம் செய்பவனும், வயது முதிர்ந்த பெண்கள் விருப்பப்படி நடப்பவனுமாவான். (பிரம்மரிஷி)
சனி நட்பு வீட்டில் (ரிஷபம், மிதுனம், கன்னி)
பிறரால் சம்ரட்சணை செய்யப்பட்டவன், (பிருஹத் ஜாதகம் ) நிதானமான போக்கு, வலிமையான வாக்கு பலிதம், செயலில் உறுதிப்பாடு, நம்பிக்கைக்கு உகந்தவர் (களஞ்சியம் 3)
மேஷ லக்னம் – 2ல் 9, 10 சனி <- 5 சூரியன் ஆட்சி – மாவீரன் அலெக்சாண்டர்.
2 ல் 9 சனி – தந்தையால் அயல்நாட்டு உத்தியோகத்தால் செல்வம் சேரும். வைராக்கிய முடையவர்
2ல் 10 சனி – அதிர்ஷ்டசாலி அதிக பணம் சம்பாதிப்பவர் மளமளவென்று முன்னேறி அளவிட முடியாதபடி பொருள் சேரும்
ரிஷப சனி <- செவ்வாய் – போர்க்கதைகளை விரும்பிக் கேட்பவர். ஆனால் போர்க்களத்திற்கு சென்றால் கோழையாகி விடுவார்
ரிஷபத்தில் சந்திரன் + சனி – அவரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும், இயற்கையாகவே சந்தேக குணம் உள்ளவர்.
ரிஷப சந்திரன் + செவ்வாய் + சனி – முசோலினி சாதாரண விஷயங்களுக்கு கூட நிதானத்தை இழந்து உணர்ச்சிவசப்படுதல்.
ரிஷப சனி + <- பாபர் – தூக்கு போட்டுக் கொள்வதால் மரணம்.
ரிஷப சனி <- குரு – சனி திசையில் மிகுந்த சாதகமும் அதிர்ஷ்டமான பலன்களும் கிட்டும் (பாவார்த்த ரத்னாகரா)