சமையல் வேலை செய்பவன், குயவர் (பிருகத்ஜாதகம்) தாடி மீசை சிரைக்கின்ற அம்பட்டன், குடம் செய்பவன், தூதன் சமையல் வேலை செய்பவன் (பலதீபிகை) அஞ்சத்தக்கவன் பொருள் நிறைவு உள்ளவன், நகரத்திற்கும், ஊருக்கும் உறவினருக்கும் கழகத்திற்கும் தலைவன், மிக்க இன்பம் உள்ளவன் புகழ் உள்ளவன் (சாராவளி) நாவிதர், சிற்பி (கர்க ஜாதகம்) வாழைப்பழ சோம்பேறி, சத்விஷயம், புராணக்கதைகளை பேசிக்கொண்டிருந்தாலும், இவரது பேச்சுக்குத் தகுந்த செயல் இவரிடம் காண்பது அரிது. ( ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரை)
குருதசை சாமான்யம், சனிதசை யோகம் குரு தசை சனி புத்தி அதிகயோகம். (பாவார்த்த ரத்னாகரா)
அப்புவாய் அந்தணனும் நீலன் கூடில்
அப்பனே புத்திரர்கள் ஈனமாகும் (புலிப்பாணி)
துலாத்தில் குரு + சனி – சர்க்கரைவியாதி.
குரு + சனி – குரூரமான குணம். தானே சமைத்துச் சாப்பிடும் நிலை உருவாகும். உறவோ சொந்தமோ உடனிருக்கமாட்டார்கள். குருவின் பலனை சனி பெரும்பாலும் தடுத்துவிடும். (புலியூர் கேசிகன்)
குரு + பலவீனமான சனி – குரு சண்டாள யோகம்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஜென்ம லக்னமாக ஒரேராசியில் 5 பாகைக்குள் குரு + சனி – வழக்கறிஞர்.
குருவும் சனியும் ஒருவருக்கொருவர் 5-9 ஆக வழக்கறிஞர்.
சனி+ <- குரு, மகரலக்னம் – சனி <- குரு, மேஷசனி <- குரு 6ல் சனி <- குரு = பெருமளவு பொருள் சேரும்.
சனி + குரு பலவீனம் – நீரிழிவு நோய்.
சனி – குரு – சந்திரன் சேர்க்கை பார்வை – கடல் கடந்து அயல்நாடு செல்வார்.
கடகம் – மகரம் வீட்டில் சனி – குரு – சந்திரன் மேற்படி.
6ல் குரு + சனி – இரத்தம், நுரையீரல் பாதிப்பு.
சந்திரனுக்கு 6ல் குரு + சனி – மேற்படி.
1, 8ல் சூரியன் + குரு + சனி – ஈளைநோய்.
குரு + சனி– 1 +3- அண்டவாதநோய். (ஜோதிடமும் மருத்துவமும்)
குரு + சனி + 12 – பணத்தைப் பறிகொடுப்பவர்.
செவ்வாய் + குரு + சனி, குரு + சனி + பாபர் = குருவும் பாவியுடன் சனி நிற்கிலும், கும்ப மேடத்ததிதிபதி கூடினும்.
வருகுவந்த மனைதனிலே வம்சங்களும் நாசமாகிவிடும்
பெருகு செல்வமும் பின்னமதாகிவிடும்
பெண்டு பிள்ளைகளும் பூஷனமும் நாசமாம் (வீமகவி)
5, 9ல் குரு + சனி + ராகு – கலப்பு மணம்
தனுசில் குரு ஆட்சி <– துலாத்தில் சனி உச்சம் – தனவான்.
சரம், உபயத்தில் குரு + சனி + ராகு – ஊரைவிட்டு தேசாந்தரம் போவான் (புலிப்பாணி)
கடக லக்னம் – 6 குரு + 8 சனி + ராகு T.B. 27 வயதில் இறப்பு.
5ல் 9 குரு <– செவ்வாய், சனி – சுபாஸ் போஸ், கலப்பு மணம்.