தரித்திரன், மானமில்லாதவன், துக்கமுடையவன், காவல் திறமையில்லாத சித்திரம் எழுதுபவன், புத்தகங்கள் எழுதுபவன் புத்திர சம்பத்தில்லாதவன் (பிருஹத் ஜாதகம்) அற்புதமும் அற்ப புத்திரர் உடையவன் (பாரிஜோதகம்) சொற்பத சந்தானந்தம் ஆண்மையற்றவன், அயலார் அன்னம் புசித்து அயலார் வீட்டில் வசிப்பவன், மூடனும், குழந்தைகள் போல் பெண்கள் பால் படுபவனுமாவான். (பிரம்மரிஷி) ஆனதோர் மிதுனங்கன்னி தனிற்சனி அமர்ந்த கலை தானமாய்ப் புதல்வரற்பம் தலைமை யில்லார்க்கு மாண்பன் யுக்தி, புத்தி இல்லாதவரிடம் சினேகம் செய்வான் (சாதக அலங்காரம்)
குரோத எண்ணம் உடையவன், ஏழை, சண்டை போடுபவன் நடைமுறையிலும், செய்கையிலும் ஒழுங்கற்றவன், குறுகிய புத்தி, மூர்க்கமானவன், பழைமைவாதி, பலவீனமான உடல் (HPA) கெட்ட குணம் உள்ளவர், பேடித் தன்மையானவர், குழந்தை பாக்கியத்திற்கு குறை உண்டாகும். வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்)
கணக்கன் வீட்டில் பேறுடன் காரிநிற்கில் நபுஞ்சகனாய்ப் பிறப்பான் தானே (சாதக அலங்காரம்)
கன்னியில் சனி <- சூரியன் – மகிழ்ச்சி குறைவு. கட்டுப்பா உணவு, தெய்வபக்தி, அளவோடு நன்மை.
கன்னி சனி <- சந்திரன் – பெண்கள் மூலம் நலம் வாழ்வில் நல்ல ஸ்தானம் அமையும். அமைதியான வாழ்வு.
கன்னி சனி <- செவ்வாய் – பிடிவாதமானவர் அருவருப்பான தோற்றம், வலிப்பு நோய், பிறர் கஷ்டங்களை, பாரங்களை தாங்குபவர். (சாராவளி)
கன்னியில் செவ்வாய் + சுக்ரன் + சனி – கோடீஸ்வரர்.